செய்திகள்
மத்திய அரசு

கடந்த ஆண்டை விட 8 முக்கிய துறைகளின் வளர்ச்சி சரிவு - மத்திய அரசு ஒப்புதல்

Published On 2019-09-03 02:54 GMT   |   Update On 2019-09-03 02:54 GMT
நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள் உள்ளிட்ட 8 முக்கிய துறைகளில் கடந்த ஆண்டைவிட 2.1 சதவீத வளர்ச்சி மட்டுமே ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரம், எக்கு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய 8 முக்கிய துறைகளில் கடந்த ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில் வெறும் 2.1 சதவீத வளர்ச்சி மட்டுமே ஏற்பட்டுள்ளது. இதை மத்திய அரசு தெரிவித்துள்ளது.



கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், இந்த துறைகளில் 5.9 சதவீத வளர்ச்சி ஏற்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News