செய்திகள்
மகளுடன் ஸ்வர்னலதா

கருணை கொலை செய்ய அனுமதி கொடுங்கள் -மனநலம் குன்றிய மகளின் தாய் கடிதம்

Published On 2019-08-31 09:28 GMT   |   Update On 2019-08-31 09:28 GMT
ஆந்திர கவர்னருக்கு பெண் ஒருவர், மனநலம் குன்றிய தன் மகளை கருணை கொலை செய்ய அனுமதி வழங்குமாறு கடிதம் எழுதியுள்ளார்.
அமராவதி:

விஜயவாடாவைச் சேர்ந்தவர் ஸ்வர்னலதா. இவருக்கு ஜான்வி எனும் மனநலம் குன்றிய மகள் உள்ளார். ஜான்விக்கு 4 வயது முதல் உளவியல் பிரச்சனையும், 8 வயது முதல் ஜினிக் கோளாறும் ஏற்பட்டுள்ளது.

லதாவின் கணவர் மூத்த உதவியாளராக பணிபுரிந்த மருத்துவமனையில் இவர்கள் மகள் ஜான்விக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. இதையடுத்து ராஜிய லட்சுமி எனும் மருத்துவர் உளவியல் துறையின் தலைமை மருத்துவராக கடந்த 2010ம் ஆண்டு பொறுப்பேற்றார்.

அதிலிருந்து மகளுக்கு வழங்கப்பட்டு வந்த சிகிச்சை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஸ்வர்னலதா கூறுகையில், ‘ஆந்திர கவர்னர் பிஸ்வபூசன் ஹரிச்சந்தனுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

ஒன்று அந்த மருத்துவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் என் மகளை கருணை கொலை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளேன்’ என கூறினார்.  
Tags:    

Similar News