செய்திகள்
ப சிதம்பரம்

சட்டத்தில் இருந்து தப்பி ஓடி ஒளிய அவசியம் இல்லை - ப.சிதம்பரம் விளக்கம்

Published On 2019-08-21 09:40 GMT   |   Update On 2019-08-21 09:40 GMT
நான் சட்டத்தில் இருந்து தப்பி ஓடி ஒளிய அவசியம் இல்லை என்று ப.சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கூறி உள்ளார்.
புதுடெல்லி:

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்துக்கு டெல்லி ஐகோர்ட்டு முன் ஜாமீன் வழங்க மறுத்து விட்டது.

இதைதொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.



டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ப.சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்து உள்ளார். இந்த மனுவில் ப.சிதம்பரம் கூறி இருப்பதாவது:-

நான் சட்டத்தில் இருந்து தப்பி ஓடி ஒளிய அவசியம் இல்லை. முதல் தகவல் அறிக்கையில் எனது பெயர் குறிப்பிடாத நிலையில் முன் ஜாமீன் மறுத்தது ஏன்?

நான் விசாரணைக்காக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை முன்பு எந்த சூழ்நிலையிலும் ஆஜராகாமல் இருந்தது இல்லை. தப்பிச் செல்லவோ, சாட்சிகளை கலைக்க முயன்றதாகவோ என் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை.

எம்.பி.யாக உள்ள என் மீது இதற்கு முன்பு எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் இருந்ததும் இல்லை.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

Tags:    

Similar News