செய்திகள்
ப.சிதம்பரம்

ப.சிதம்பரத்திற்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை லுக்அவுட் நோட்டீஸ்

Published On 2019-08-21 06:07 GMT   |   Update On 2019-08-21 06:07 GMT
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள ப.சிதம்பரம் எங்கு இருக்கிறார் என்பதை அறிய முடியாததால் அவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட் மறுத்துவிட்டது. இதையடுத்து இந்த வழக்கை விசாரித்து வரும்  சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ப.சிதம்பரத்திடம் நேரடியாக விசாரணை நடத்தி அவரை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது. 

இதற்காக டெல்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர். நான்கு முறை சென்றும் ப.சிதம்பரம் வீட்டில் இல்லாததால் விசாரணை நடத்த முடியாமல் திரும்பினர்.  தற்போது ப.சிதம்பரம் எங்கு இருக்கிறார் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. 

இதற்கிடையே, முன்ஜாமீன் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ப.சிதம்பரம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவையும் அவசரமாக விசாரிக்க  தலைமை நீதிபதி அமர்வு மறுத்துவிட்டது. இதனால் ப.சிதம்பரத்திற்கு சிக்கல் நீடிக்கிறது.

இரு ஒருபுறமிருக்க ப.சிதம்பரம் விமானங்கள் மூலம் வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையில், அவருக்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News