செய்திகள்
நிலச்சரிவு

கேரளா நிலச்சரிவு: ரேடார் உதவியுடன் நிலச்சரிவில் புதையுண்டவர்களின் உடல்கள் மீட்பு

Published On 2019-08-18 13:48 GMT   |   Update On 2019-08-18 13:48 GMT
வயநாடு மற்றும் மலப்புரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்தவர்களின் உடல்களை மீட்க ரேடார்கள் பயன்படுத்தப்படுகிறது.
கேரளாவில் கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை பெய்தது. தொடக்கத்தில் சீரான அளவில்தான் மழை பெய்தது. 2-வது கட்டமாக இந்த மாதம் 8-ந்தேதியில் இருந்து மிகக் கனமழை பெய்தது.

இதனால் கேரளாவில் உள்ள வயநாட்டின் புத்துமலா, மலப்புரத்தில் உள்ள கவலப்பாரா ஆகிய இரண்டு இடங்களில் மிக அதிக அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் ஏரராளமானோர் உயிரிரோடு புதைந்தனர். அவர்களை தேடும் பணி  தீவிரமான நடைபெற்று வருகிறது. மலையில் இருந்து சரிந்த மண் வீடுகளை அடியோடு விழுங்கியதாலும், மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டதாலும் உடல்கள் எங்கு புதைந்திருக்கின்றன என்பதை கண்டறிவதில்  சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மீட்புப்பணியில் தற்போது மண்ணுக்குள் ஊடுருவி உடல்களை அடையாளம் காணும் ரேடார்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஐதராபாத்தை சேர்ந்த வல்லுநர்கள் ஜிபிஆர் உதவியிடன் இரண்டு கிராமத்திலும் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



தற்போது வரை கேரளாவில் கனமழைக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது.  8-ந்தேதிக்குப் பிறகு மழைக் காரணமாக 519 நிவாரண முகாமலி 83 ஆயிரம் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மழையால் 1204 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன.

மலப்புரத்தில் 53 பேரும், வயநாட்டில் 12 பேரும், கோழிக்கோட்டில் 17 பேரும், வடக்கு மாவட்டங்களில் மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர். இன்னும் 26 பேர் கண்டுபிடிக்கப்படவில்லை.
Tags:    

Similar News