செய்திகள்
மணிப்பூர் மாநில பசுமைத் தூதுவர் வலண்டினா தேவி

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை உருவாக்குவேன் : மணிப்பூர் பசுமைத் தூதுவர்

Published On 2019-08-13 12:40 GMT   |   Update On 2019-08-13 12:40 GMT
மணிப்பூர் மாநிலத்தின் பசுமை தூதுவரான 9 வயது சிறுமி வலண்டினா தேவி,எதிர்காலத்தில் மக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவேன் என தெரிவித்துள்ளார்.
இம்பால்:

மணிப்பூர் மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காக்சிங் மாவட்டத்தின் ஹியாங்லாம் நகரைச் சேர்ந்தவர் சிறுமி வலண்டினா. 4 வருடங்களுக்கு முன்பு இவர் நட்டு வைத்த இரண்டு குல்மோகர் மரங்கள், சாலை அகலப்படுத்தும் பணிகள் காரணமாக வெட்டப்பட்டதால் மனமுடைந்து அழுதார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வீடியோவாக பரவியது. அந்த குழந்தையின் அந்த செயலை பலரும் பாராட்டினர். 

இந்த வீடியோ முதல் மந்திரி கவனத்திற்கும் சென்றது. இயற்கை மீது இவர் கொண்ட பற்று காரணமாக மாநில முதல் மந்திரி பிரென் சிங், மாநில அரசின் மணிப்பூர் பசுமை இயக்கத்தின் ‘பசுமைத் தூதுவராக’ அறிவித்தார். மேலும் 20 மரக்கன்றுகளையும் பரிசாக அளித்தார்.

இதுகுறித்து சிறுமியிடம் கேட்டபோது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி அதிகமானோர் கவலை கொள்வதில்லை. இது ஏன் என்று எனக்கு தெரியவில்லை. வருங்காலத்தில் வனத்துறை அதிகாரி ஆக விரும்புகிறேன். மேலும், மக்கள் அனைவரிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றார்.

Tags:    

Similar News