செய்திகள்
கம்யூனிஸ்ட் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா

காஷ்மீர் செல்ல முயன்ற சீதாராம் யெச்சூரி, டி.ராஜா ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்

Published On 2019-08-09 09:07 GMT   |   Update On 2019-08-09 09:07 GMT
ஜம்மு-காஷ்மீரில் தற்போது நிலவும் சூழல் தொடர்பாக ஆய்வு செய்ய சென்ற இடதுசாரி தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா ஆகியோர் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீரில் தற்போது நிலவும் சூழல் தொடர்பாக ஆய்வு செய்ய சென்ற இடதுசாரி தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா ஆகியோர் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கும், அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதற்கும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.



இந்நிலையில், இந்த நடவடிக்கைக்கு பிறகு காஷ்மீரின் தற்போதைய நிலவரத்தை நேரில் கண்டறிவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா ஆகியோர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று ஸ்ரீநகர் சென்றனர்.

விமான நிலையத்தில் அவர்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். விமான நிலையத்தை விட்டு வெளியே போகக்கூடாது என்று தடை விதித்தனர். தனது வருகை குறித்து காஷ்மீர் கவர்னருக்கு நேற்று தகவல் அளித்திருந்ததாக சீதாராம் யெச்சூரி அதிகாரிகளிடம் தெரிவித்தும் அவர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

சீதாராம் யெச்சூரி, டி.ராஜா ஆகியோர் விரைவில் டெல்லி திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News