செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

இன்றே வாக்கெடுப்பு- அவசரமாக விசாரிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட்

Published On 2019-07-22 05:31 GMT   |   Update On 2019-07-22 06:25 GMT
கர்நாடகாவில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்தனர். இதில் ராமலிங்கரெட்டி, ஆனந்த்சிங், ரோஷன் பெய்க், சுதாகர் ஆகியோர் தவிர மற்ற 12 பேரும் மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியுள்ளனர்.

மேலும், மந்திரியாக இருந்த சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேரும் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். இதனால் கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கூட்டணி ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சி தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பை உடனே நடத்த உத்தரவிடக்கோரி, சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இன்று மனுவை விசாரித்த நீதிபதிகள், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்தனர். வழக்கை இன்று விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாளை பார்க்கலாம் என பதிலளித்துள்ளனர்.
Tags:    

Similar News