செய்திகள்
தஸ்லிமா நஸ்ரின்

சர்ச்சைக்குரிய எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் விசா காலம் மேலும் ஓராண்டுக்கு நீடிப்பு

Published On 2019-07-21 08:04 GMT   |   Update On 2019-07-21 08:04 GMT
வங்கதேசத்தை சேர்ந்த சர்ச்சைக்குரிய பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் விசா காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீடித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுடெல்லி:

வங்கதேசத்தை சேர்ந்த பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின். சுவீடன் நாட்டு குடியுரிமை பெற்றுள்ள இவர், புத்தகங்கள் எழுதி கடும் சர்ச்சையில் சிக்கினார். இதனால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.
 
இதைதொடர்ந்து, கடந்த 2004ஆம் ஆண்டு முதல் தஸ்லிமா நஸ்ரின் இந்திய விசா பெற்று இங்கு தங்கி வருகிறார். அமெரிக்கா, ஐரோப்பா உள்பட பல நாடுகளில் காலத்தை கழித்து வந்தாலும் பெரும்பாலும் இந்தியாவில் இருப்பதையே அவர் விரும்பினார். தற்போது இவர் கொல்கத்தாவில் தங்கியுள்ளார்.

தஸ்லிமா நஸ்ரின் விசா காலம் இந்த மாதம் நிறைவடைய உள்ள நிலையில், அவரது விசா காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
Tags:    

Similar News