செய்திகள்
பாதி அளவு சந்திரகிரகணம்

149 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த அபூர்வ சந்திர கிரகணம்

Published On 2019-07-17 05:45 GMT   |   Update On 2019-07-17 05:45 GMT
149 ஆண்டுகளுக்கு பிறகு அபூர்வமான பாதி அளவு சந்திர கிரகணம் நேற்று நிகழ்ந்தது. இதை பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
புதுடெல்லி:

சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே நேர் கோட்டில் பூமி வரும் போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. அப்போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுந்து அதை மறைக்கிறது.

இந்த நிலையில் நேற்று சந்திர கிரகணம் நள்ளிரவு 12.12 மணிக்கு தொடங்கி அதிகாலை 1.31 மணிக்கு முழுமை அடைந்தது. அதன் பின் சிறிது சிறிதாக பூமியின் நிழல் சந்திரன் மீது இருந்து விலகி கொண்டு வந்தது. அதிகாலை 4.29 மணிக்கு சந்திர கிரகணம் முடிந்தது. இது மிகவும் அபூர்வமான சந்திர கிரகணம் ஆகும்.



சந்திர கிரகண நிகழ்வின் போது பூமியின் நிழல் பகுதி அளவு மட்டுமே சந்திரனை மறைக்கும். சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி சரியான நேர் கோட்டில் அமையாமல் பகுதியளவு நேர்கோடாக வந்தால் பாதி சந்திர கிரகணம் நடக்கும்.

இதுபோன்ற பாதி சந்திர கிரகணம் தான் நேற்று நள்ளிரவு நடந்தது. இது 149 ஆண்டுகளுக்கு பிறகு நடந்துள்ளது. இந்த சந்திர கிரகணம் ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, வளைகுடா, நாடுகளில் தெளிவாக காண முடிந்தது.

இந்த கிரகணத்தை வெறும் கண்களால் கூட பார்க்க முடியும் என கூறப்பட்டிருந்தது. அடுத்து இந்தியாவில் 2021-ம் ஆண்டு முழுமையான கிரகணம் தோன்றும் என்பது குறிப்பிடதக்கது.
Tags:    

Similar News