செய்திகள்
சமீர் அப்ரால்

அவரின் சீருடையை நான்.. -இறந்த போர் விமானியின் மனைவி உருக்கம்

Published On 2019-07-16 03:38 GMT   |   Update On 2019-07-16 03:45 GMT
போர் விமான சோதனையின்போது உயிரிழந்த விமானியின் மனைவி தன் கருத்தை உருக்கமாக தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:

பெங்களூருவில் உள்ள எச்ஏஎல் விமான நிலையத்தில் கடந்த பிப்ரவரி 1ம் தேதி காலை 10 மணியளவில் இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானது.

மிராஜ் 2000 போர் விமானத்தில் சித்தார்த் நேகி மற்றும் சமீர் அப்ரால் ஆகிய 2 பைலட்டுகள் வழக்கமாக பயிற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், விமானம் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. பின்னர், விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க முற்பட்டனர். ஆனால், அதற்குள் விமானம் தரையில் மோதி தீப்பிடித்தது.

விமானம் தரையை நெருங்கியபோது 2 விமானிகளும் வெளியே குதித்தனர். இதில் பலத்த காயமடைந்த பைலட் சித்தார்த் நேகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு பைலட் சமீர் அப்ரால், பலத்த காயமடைந்தார். ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.



உயிரிழந்த சமீர் அப்ராலின் மனைவி கரீமா அப்ரால் ஆவார். இவர் போர் விமானிக்கான நேர்முக தேர்வில் பயிற்சிப் பெற்றுள்ளார். இவர் விமானப்படை அகாடமியில் அடுத்த ஆண்டு சேரவுள்ளார்.

இது குறித்து கரீமா அப்ரால் கூறுகையில், 'என் கண்ணீர் இன்னமும் காயவில்லை. ஒரு கோப்பை தேனீரை கையில் கொடுத்தப்படி அவரை நாட்டுக்காக சேவை புரிய அனுப்புவேன்.

என் கணவரின் வாழ்க்கை பணியில் எப்படி இருந்தது என்பதை காண விரும்பினேன். அவர் அணிந்த சீருடையை நான் அணிவது என்னை மிகவும் ஊக்கப்படுத்தும். நிச்சயம் விரைவில் அணிவேன்' என உருக்கமாக கூறியுள்ளார்.





Tags:    

Similar News