செய்திகள்
லால் பகதூர் சாஸ்திரி சிலை

வாரணாசி விமான நிலையத்தில் சாஸ்திரியின் சிலையை திறந்து வைத்த மோடி

Published On 2019-07-06 07:03 GMT   |   Update On 2019-07-06 09:40 GMT
வாரணாசி விமான நிலைய வளாகத்தில் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
வாரணாசி:

பாஜக நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதிலும் பாஜக உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் இன்று நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு, பாஜக உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைக்க உள்ளார்.

இதற்காக டெல்லியில் இன்று காலை விமானத்தில் புறப்பட்ட மோடி, வாரணாசியில் உள்ள பாபத்பூர் விமான நிலையத்தை அடைந்தார். அவரை முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் மகனும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அனில் சாஸ்திரி, மோடியை வரவேற்றார்.



பின்னர், விமான நிலைய வளாகத்தில் லால் பகதூர் சாஸ்திரியின் சிலையை மோடி திறந்து வைத்து, மரியாதை செலுத்தினார். அப்போது உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், அனில் சாஸ்திரி, லால் பகதூர் சாஸ்திரியின் இளைய மகனும் பாஜக தலைவருமான சுனில் சாஸ்திரி, லால் பகதூர் சாஸ்திரியின் பேரனும் உ.பி. அமைச்சருமான சித்தார்த் நாத் சிங் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து வாரணாசியில் மரக்கன்று நடும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதன் அடையாளமாக ஒரு மரக்கன்றை நட்டு தண்ணீர் ஊற்றினார்.

Tags:    

Similar News