செய்திகள்
வீடியோவில் பதிவான காட்சி.

அமர்நாத் யாத்திரை சென்ற பெண் பயணி குளிக்கும் காட்சியை வீடியோ எடுத்த காவலர் கைது

Published On 2019-07-05 14:03 GMT   |   Update On 2019-07-05 14:03 GMT
ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமர்நாத் கோவிலுக்கு யாத்திரை சென்ற பெண் குளிக்கும் காட்சிகளை செல்போனில் வீடியோ எடுத்த காவலர் கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்கின்றனர்.

இந்த ஆண்டு அமர்நாத்யாத்திரை 46 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அமர்நாத் கோவிலில் தரிசனம் மேற்கொள்ள நாடு முழுவதும் இருந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வந்தவண்ணம் உள்ளனர். 

யாதிரீகர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உள்ளூர் காவலர்கள் மற்றும் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு யாத்திரை செய்ய வந்திருந்த பெண் ரெயில் நிலையத்தில் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு காவலர் அந்தப் பெண் குளிக்கும் காட்சிகளை மறைந்திருந்து தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தார். தான் குளிக்கும் காட்சிகளை அந்த காவலர் வீடியோ எடுப்பதை கவனித்துவிட்ட பெண் உடனடியாக கூச்சலிட்டார்.

அவரது  கூச்சலைக் கேட்டு அங்கு ஓடி வந்தவர்கள் உடனடியாக வீடியோ எடுத்த காவலரை கையும்களவுமாக பிடித்து டிர்குடா காவல் நிலையத்தில் ஓப்படைத்தனர். 

இதையடுத்து அந்த காவலரை உடனடியாக கைது செய்த போலீசார் அவரது செல்போனையும் பறிமுதல் செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
Tags:    

Similar News