செய்திகள்

பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை - சபாநாயகர் தகவல்

Published On 2019-06-21 00:54 GMT   |   Update On 2019-06-21 00:54 GMT
பாராளுமன்றத்தில் பதாகைகளை ஏந்துதல், சபையின் மையப்பகுதிக்கு வருதல் போன்ற காரியங்களில் ஈடுபடுபவர்கள் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா, ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சபையில் எந்த உறுப்பினரும் பதாகைகளை ஏந்தக்கூடாது. சபையின் மையப்பகுதிக்கு வரக்கூடாது. இதுபோன்ற அமளிகள், நாடாளுமன்றத்தின் கண்ணியத்துக்கு ஊறு விளைவிப்பவை. தங்கள் உணர்வுகளை தெரிவிக்க வேறு வழிகள் உள்ளன.

பதாகைகளை ஏந்துதல், சபையின் மையப்பகுதிக்கு வருதல் போன்ற காரியங்களில் ஈடுபடுபவர்கள் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கலாம் என்று அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்துவேன். ஒரு உறுப்பினரை கொண்ட கட்சியாக இருந்தாலும் பேச வாய்ப்பு தரப்படும். கடைக்கோடி மனிதர்களுக்காகவும் எம்.பி.க்கள் குரல் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News