செய்திகள்
கால்வாயில் மூழ்கிய குழந்தைகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்

லக்னோவில் கால்வாயில் வேன் கவிழ்ந்தது - 7 குழந்தைகள் பலி?

Published On 2019-06-20 07:15 GMT   |   Update On 2019-06-20 07:15 GMT
லக்னோ அருகே கால்வாயில் வேன் கவிழ்ந்த விபத்தில் 7 குழந்தைகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் அவர்கள் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அருகே பத்வா கேதா கிராமத்தைச் சேர்ந்த 29 பேர் வேனில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு ஊருக்கு நேற்று இரவு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது கிராமத்தின் அருகே உள்ள இந்திரா கால்வாயில் உள்ள பாலத்தில் வேன் சென்று கொண்டிருந்தது. திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் கால்வாயிக்குள் கவிழ்ந்தது.

இதையறிந்த கிராம மக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினரும் கால்வாயில் இறங்கி தண்ணீரில் தத்தளித்தவர்களை மீட்டனர். இதில் 22 பேரை மீட்டனர்.



ஆனால் 7 குழந்தைகளை காணவில்லை. அவர்கள் தண்ணீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டுள்ளனர். மாயமான குழந்தைகள் 5 முதல் 10 வயது உடையவர்கள்.

அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 7 குழந்தைகளும் தண்ணீரில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
Tags:    

Similar News