செய்திகள்

பிரதமர் மோடி பட்ஜெட் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை

Published On 2019-06-19 01:23 GMT   |   Update On 2019-06-19 01:23 GMT
பிரதமர் மோடி பட்ஜெட் குறித்து தனது இல்லத்தில் நிதித்துறை அமைச்சகத்தின் 5 செயலாளர்கள், நிதி ஆயோக் அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 2-வது அரசு தனது முதல் பட்ஜெட்டை அடுத்த மாதம் 5-ந் தேதி தாக்கல் செய்ய இருக்கிறது. இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி நேற்று தனது இல்லத்தில் நிதித்துறை அமைச்சகத்தின் 5 செயலாளர்கள், நிதி ஆயோக் அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

உள்நாட்டு உற்பத்தி குறைந்து, பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், பொருளாதார மந்தநிலையை போக்குவது, உற்பத்தி துறையில் முதலீட்டை அதிகரிப்பது, வேலைவாய்ப்பை அதிகரிப்பது, விவசாய பிரச்சினைகளை தீர்ப்பது, வேளாண் வருமானத்தை பெருக்குவது, பொது முதலீட்டை அதிகரிப்பது போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் இடம்பெறும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளிடம் அறிவுறுத்தியதாகவும் தெரிகிறது.
Tags:    

Similar News