செய்திகள்

ஜம்மு காஷ்மீர் ஆளுநர் ஆனாரா கிரண்பேடி? அந்த பதிவுகளின் பின்னணி இது தான்

Published On 2019-06-17 05:54 GMT   |   Update On 2019-06-17 05:54 GMT
கிரண்பேடி ஜம்மு காஷ்மீர் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வேகமாக பரவி வருகிறது.
சமூக வலைதளங்களில் வைரலாகும் பதிவுகளில் ஒன்றில் கிரண்பேடி ஜம்மு காஷ்மீர் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே தகவலை குஜராத் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான பனுபென் பபரியாவும் பகிர்ந்து இருக்கிறார். இத்துடன் இவர் கிரண்பேடிக்கு வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படும் புதிய பதவிக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்து இருக்கிறார்.

வைரலாகும் பதிவினை ஆய்வுக்கு உட்படுத்தியதில், கிரண்பேடி ஆளுநராக நியமிக்கப்பட்டதாக பரவும் தகவல் பொய் என்பது உறுதியாகி இருக்கிறது. 2016, மே மாதம் முதல் கிரண்பேடி புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக பணியாற்றி வருகிறார்.



கிரண்பேடி ஆளுநராக நியமிக்கப்பட்டதாக கூறும் பதிவு சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த பதிவுகள் உண்மையென நம்பும் நெட்டிசன்கள் கிரண்பேடிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீர் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி சத்ய பால் மாலிக் தான் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் 2018 ஆகஸ்டு முதல் ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருக்கிறார். கிரண்பேடியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News