செய்திகள்

தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை- மல்லிகார்ஜுன கார்கே

Published On 2019-06-10 10:59 GMT   |   Update On 2019-06-10 10:59 GMT
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தான் போட்டியிடப்போவதில்லை என மல்லிகார்ஜுன கார்கே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:

சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால் தொடர்ந்து இரண்டாவது முறையாக எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் இழந்துள்ளது. இதனையடுத்து தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகப்போவதாக ராகுல்காந்தி அறிவித்திருந்தார். பெரும்பாலான காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல்காந்தியே தலைவராக தொடர வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவது யார் என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது. அந்த வகையில் மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக செய்திகள் பரவின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தான் ஒருபோதும் தலைவர் பதவிக்காக போட்டியிடப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்த மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தியே தலைவராக தொடர வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.



பாராளுமன்ற தேர்தலில் கலபுர்கி தொகுதியில் போட்டியிட்ட மல்லிகார்ஜுன கார்கே தோல்வியடைந்தார். அதேபோல் கர்நாடகாவில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் 1 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இது குறித்து அவர் கூறுகையில், " அரசியல்வாதிகளுக்கு தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜமான ஒன்றுதான். தேர்தல் தோல்வியால் நாங்கள் மனமுடைந்து போகவில்லை. மக்களுக்கான எங்களது சேவை தொடரும். தோல்வியில் இருந்து மீண்டெழுந்து அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவோம்" என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News