செய்திகள்

தேர்தல் தோல்விக்கு நானே முழுபொறுப்பு: நிகில் குமாரசாமி

Published On 2019-06-01 02:21 GMT   |   Update On 2019-06-01 02:21 GMT
தேர்தல் தோல்விக்கு நானே முழுபொறுப்பு ஏற்கிறேன். இதற்காக யாரையும் குறை சொல்ல மாட்டேன் என்று நிகில் குமாரசாமி கூறியுள்ளார்.
பெங்களூரு

பாராளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் ஜனதாதளம் (எஸ்) சார்பில் முதல்-மந்திரியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிட்டு 1¼ லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தார். தனது தோல்வி குறித்து அவர் முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

மண்டியா பாராளுமன்ற தொகுதியில் ஜனதாதளம் (எஸ்) வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளேன். எங்கள் கட்சியின் தோல்விக்கு நானே முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன். இதற்காக யாரையும் குறை சொல்ல மாட்டேன்.

தோல்விக்கு காரணங்கள் கூற விரும்பவில்லை. மண்டியாவை விட்டு நான் போக மாட்டேன். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உதவ சுமலதா முன்வர வேண்டும். மத்திய அரசு தேவையான உதவிகளை கர்நாடகத்திற்கு செய்யவில்லை என்பதை மாநில மக்கள் பார்த்து உள்ளனர். உங்களை (சுமலதா) ஆதரித்த கட்சி மத்தியில் ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளது. மண்டியா மக்களுக்கு மத்திய அரசின் திட்டங்களை பெறுவதில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறலாம்.

கர்நாடகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றிய கட்சி தொண்டர்கள் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

இவ்வாறு நிகில் குமாரசாமி குறிப்பிட்டு உள்ளார்.
Tags:    

Similar News