செய்திகள்

ரபேல் சீராய்வு மனு மீதான சுப்ரீம் கோர்ட் விசாரணை 10-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Published On 2019-05-06 09:57 GMT   |   Update On 2019-05-06 09:57 GMT
ரபேல் போர் விமானம் பேரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பின் மீதான சீராய்வு மனு விசாரணை 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ராகுல் காந்திக்கு எதிரான கோர்ட் அவமதிப்பு வழக்கும் அன்று விசாரிக்கப்படவுள்ளது. #SCadjourned #Rafale #Rafalereviewpetition
புதுடெல்லி:

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பான வழக்கில் இந்த ஒப்பந்தம் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிடமுடியாது என தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து யஷ்வந்த் சின்ஹா, பிரசாந்த் பூஷண், அருண்ஷோரி ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில்  மறுசீராய்வு மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்ற சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணையை தொடங்கி, மறு விசாரணையை வரும் பத்தாம் தேதிக்கு ஒத்திவைத்தது.



ரபேல் சீராய்வு மனுக்களை முன்னர் விசாரணைக்கு ஏற்றதன் மூலம் பிரதமர் மோடியை திருடன் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதை கோர்ட் அவமதிப்பு குற்றத்தின்கீழ் விசாரித்து தண்டிக்க வேண்டும் என பாஜக எம்.பி. மீனாட்சி லேகி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணையும் வரும் பத்தாம் தேதி சேர்த்து நடத்தப்படும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. #SCadjourned #Rafale #Rafalereviewpetition
Tags:    

Similar News