செய்திகள்

‘பானி’ புயலால் பாதித்த மாநிலங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்ப கட்டணம் இல்லை - ரெயில்வே நிர்வாகம்

Published On 2019-05-03 20:24 GMT   |   Update On 2019-05-03 20:24 GMT
‘பானி’ புயலால் பாதித்த மாநிலங்களுக்கு ரெயிலில் நிவாரண பொருட்கள் கட்டணமின்றி அனுப்ப ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளது. #CycloneFani
புதுடெல்லி:

ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

‘பானி’ புயலால் பாதித்த ஒடிசா, ஆந்திரா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு ரெயிலில் நிவாரண பொருட்கள் கட்டணமின்றி கொண்டுசெல்லப்படும். மாநிலங்களுக்குள்ளேயோ, வேறு ஒரு மாநிலத்தில் இருந்தோ இந்த பொருட்களை பயணிகள் ரெயில் மற்றும் சரக்கு ரெயில்களில் கொண்டுசெல்லலாம். ஆனால் அனுப்புபவர் அல்லது பெறுபவர் மாவட்ட கலெக்டர் அல்லது மாவட்ட கமிஷனராக இருக்க வேண்டும்.



அதேபோல தேவைக்கேற்ப கூடுதல் ரெயில் பெட்டிகள் மற்றும் கூடுதல் சரக்கு பெட்டிகள் சேர்ப்பது குறித்து அந்தந்த கோட்ட ரெயில்வே மேலாளரே முடிவு எடுக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #CycloneFani
Tags:    

Similar News