செய்திகள்

சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு முடிவு- மாணவர்களைவிட திருநங்கை மாணவர்கள் அதிக தேர்ச்சி

Published On 2019-05-02 10:54 GMT   |   Update On 2019-05-02 10:54 GMT
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட திருநங்கை மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். #CBSE #CBSE12thResult #TransgenderStudents
புதுடெல்லி:

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. ஒட்டுமொத்தமாக 83.4 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 88.70 சதவீதம் பேரும், மாணவர்கள் 79.40 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 9 சதவீதம் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருநங்கை மாணவர்கள் 83.3 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தைவிட அதிகம்.

500-க்கு 499 மதிப்பெண்களுடன் காசியாபாத்தைச் சேர்ந்த மாணவி ஹன்சிகா சுக்லா, முசாபர்நகரைச் சேர்ந்த கரிஷ்மா அரோரா ஆகியோர் முதலிடம் பிடித்துள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடத்தையும், சென்னை மண்டலம் இரண்டாவது இடத்தையும், டெல்லி மண்டலம் மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளன.

வெளிநாட்டு பள்ளிகளும் தேர்ச்சி விகிதத்தை முன்னேறி உள்ளன. கடந்த ஆண்டு 94.94 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு 95.43 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற என் இளம் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அவர்களது முயற்சிகளுக்கும் என் வாழ்த்துக்கள்” என மோடி குறிப்பிட்டுள்ளார். #CBSE #CBSE12thResult #TransgenderStudents
Tags:    

Similar News