செய்திகள்

ஒடிசாவில் 115.34 டிகிரி வெயில் கொளுத்தியது

Published On 2019-04-28 23:23 GMT   |   Update On 2019-04-28 23:23 GMT
ஒடிசா மாநிலத்தில் அதிகபட்சமாக தொழிற்சாலைகள் நிறைந்த தல்செர் பகுதியில் 115.34 டிகிரி வெயில் சுட்டெரித்தது. #OdishaHeatWate
புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலத்தில் குறிப்பாக மேற்கு பகுதியில் கடந்த ஒரு வாரமாக வெயில் கொளுத்தி வருகிறது. மாநிலத்தில் உள்ள 14 நகரங்களில் நேற்று 104 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. இதில் அதிகபட்சமாக தொழிற்சாலைகள் நிறைந்த தல்செர் பகுதியில் 115.34 டிகிரி வெயில் சுட்டெரித்தது. இதனால் பகல் நேரத்தில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். மாநிலத்தின் மேற்கு பகுதியில் அனல் பறப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தல்செருக்கு அடுத்த படியாக தித்லகார் பகுதியில் 112.1 டிகிரி வெயில் பதிவானது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம், “மாநிலத்தில் பகல் நேர வெயில் குறைவதற்கான வாய்ப்பு இல்லை. அடுத்த சில நாட்களும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும்” என்று தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News