செய்திகள்

பாலக்காட்டில் சொகுசு காரில் வந்த தம்பதியிடம் ரூ.1.38 கோடி பறிமுதல்

Published On 2019-04-06 15:28 GMT   |   Update On 2019-04-06 15:28 GMT
பாலக்காட்டில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.1 கோடியே 39 லட்சத்து 43 ஆயிரத்து 600 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சொர்ணூர் டி.எஸ்.பி. சனோஜ் தலைமையில் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் மற்றும் போலீசார் பட்டாம்பியில் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது பாலக்காடு- குருவாயூருக்கு சென்ற சொகுசு காரை நிறுத்தி விசாரணை நடத்தினர். காரில் வந்தவர்கள் பட்டாம்பியை சேர்ந்த அப்துல் மஜீத் (வயது 49), அவரது மனைவி நஜ்மா மற்றும் அவர்களது மகன் நஜிப் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை நடத்தினர்.

காரில் ரூ.1 கோடியே 39 லட்சத்து 43 ஆயிரத்து 600 பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர். பிடிட்ட பணம் குறித்து தம்பதியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News