செய்திகள்

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்- தம்பதி காயம்

Published On 2019-04-06 10:34 GMT   |   Update On 2019-04-06 10:34 GMT
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் தம்பதி காயமுற்றனர். #JKEncounter
ஜம்மு:

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த மாதம் 14-ந்தேதி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் புகுந்து ஆயிரம் கிலோ வெடிகுண்டுகளை வீசி பயங்கரவாதிகளின் முக்கிய முகாம்களை அழித்தது.

இதையடுத்து இருநாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் உருவானது. ஜம்மு காஷ்மீர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை பாகிஸ்தான் படையினர், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். காஷ்மீரின் ரஜோரி மாவட்டம் நவ்ஷேரா செக்டாரில் உள்ள கலால் பகுதியில் பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில், சஞ்சீவ் குமார் (32) அவரது மனைவி ரீதா குமாரி (28) ஆகியோர் காயமடைந்தனர். இதில் காயமடைந்த இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு , சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #JKEncounter

Tags:    

Similar News