செய்திகள்

திவால் நடவடிக்கை தொடர்பான ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை ரத்து - சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Published On 2019-04-03 00:55 GMT   |   Update On 2019-04-03 00:55 GMT
திவால் நடவடிக்கை தொடர்பான ரிசர்வ் வங்கி சுற்றறிக்கையை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் நீதிபதி தீர்ப்பு அளித்தார். #RBI #SupremeCourt
புதுடெல்லி:

ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு பிப்ரவரி 12-ந் தேதி ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது. அதில், ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட கடன்களை திருப்பி செலுத்தாத நிறுவனங்கள், 180 நாட்களில் தீர்வு காண்பதற்கான திட்டத்துக்கு உடன்பட வேண்டும் என்றும், அதற்குள் தீர்வு காணப்படாமல் ஒரு நாள் தாண்டினாலும், அந்நிறுவனங்களை ‘திவால்’ ஆனதாக அறிவித்து, வழக்கை திவால் கோர்ட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி ஆர்.எப்.நாரிமன் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அந்த சுற்றறிக்கையை ரத்து செய்து நேற்று தீர்ப்பு அளித்தது.
Tags:    

Similar News