செய்திகள்

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு

Published On 2019-04-01 19:08 GMT   |   Update On 2019-04-01 19:08 GMT
எமிசாட் செயற்கைகோளை விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி தனது பாராட்டை தெரிவித்துள்ளார். #PMModi #ISRO #PSLVC45
வார்தா:

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து மின்னணு நுண்ணறிவு எமிசாட் செயற்கைகோளை சுமந்து கொண்டு பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் நேற்று காலை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. 436 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள் ராணுவ உளவு செயல்பாட்டுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

இந்நிலையில் மராட்டிய மாநிலம் வார்தாவில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். அவர் தன்னுடைய பேச்சில், எமிசாட் செயற்கைகோளை விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தி இஸ்ரோ விஞ்ஞானிகள் வரலாற்று சாதனை படைத்து இருக்கின்றனர் என குறிப்பிட்டார்.
Tags:    

Similar News