செய்திகள்

பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பிரதமர் மோடி செல்வாக்கு உயர்வு

Published On 2019-03-09 21:09 GMT   |   Update On 2019-03-09 21:09 GMT
பாகிஸ்தானில் இந்தியா நிகழ்த்திய பாலகோட், முசாபராபாத், சகோதி தாக்குதல்களைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் செல்வாக்கு அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது. #PMModi
ஐதராபாத்:

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் கடந்த மாதம் 14-ந் தேதி துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் பலியாகினர்.

இந்த தாக்குதலுக்கு சரியாக 12 நாளில் இந்தியா பதிலடி தந்தது. 26-ந் தேதி போர் விமானங்கள் பாகிஸ்தான் சென்று, பாலகோட், முசாபராபாத், சகோதி ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை குண்டு போட்டு அழித்தன. இந்த தாக்குதல்களைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் செல்வாக்கு அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது.

ரிபப்ளிக் டி.வி.யின் ‘நேஷனல் அப்ரூவல் ரேட்டிங்’கில், மோடியின் செல்வாக்கு 62 சதவீதமாக அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது. 
Tags:    

Similar News