செய்திகள்

படேல் இன தலைவர் ஹர்திக் படேல் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார்?

Published On 2019-03-07 12:29 GMT   |   Update On 2019-03-07 12:29 GMT
குஜராத்தில் படேல் இன தலைவரான ஹர்திக் படேல் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாகவும், ஜாம்நகர் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. #ParliamentElection #HardikPatel #Congress
அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் படேல் இனத்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருபவர் ஹர்திக் படேல். இவர் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக் விமர்சித்து வருபவர்.

இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலில் குஜராத் மாநிலத்தின் ஜாம்நகர் தொகுதியில் வேட்பாளராக களமிறங்க முடிவு செய்துள்ளார். ஆனால், சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டால் காங்கிரஸ் ஆதரவு தர மறுக்கிறது.

இந்நிலையில், படேல் இன தலைவரான ஹர்திக் படேல் காங்கிரஸ் கட்சியில் அடுத்த வாரம் இணைய உள்ளதாகவும், ஜாம்நகர் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் 12-ம் தேதி குஜராத் மாநிலத்துக்கு வருகை தரவுள்ளார். அப்போது ராகுலை  நேரில் சந்தித்து ஹர்திக் படேல் காங்கிரசில் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #ParliamentElection #HardikPatel #Congress
Tags:    

Similar News