செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டில் மகாத்மா காந்தி கொலையை மீண்டும் விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி

Published On 2019-03-05 01:34 GMT   |   Update On 2019-03-05 01:34 GMT
மகாத்மா காந்தி கொல்லப்பட்டது குறித்து மறுவிசாரணை நடத்த கோரிய மனு மீதான விசாரணையை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #MahatmaGandhi #SupremeCourt
புதுடெல்லி:

மும்பையை சேர்ந்த ஆராய்ச்சியாளர் பங்கஜ் பட்னிஸ் என்பவர் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில், மகாத்மா காந்தி கொல்லப்பட்டது குறித்து மறுவிசாரணை நடத்த வேண்டும் என்று கூறி ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனு 2018-ம் ஆண்டு மார்ச் 28-ந் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இப்போது பங்கஜ் பட்னிஸ் மீண்டும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மறுஆய்வு செய்து, புதிய ஆதாரங்கள் இருப்பதால் காந்தி கொல்லப்பட்டது குறித்து மறுவிசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.



இதற்கு ஆதாரமாக மவுண்ட்பேட்டன் மகள் எழுதியது உள்பட 2 புத்தகங்களை கொடுத்தார். இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எல்.என்.ராவ் ஆகியோரை கொண்ட அமர்வு ஆய்வு செய்து, “மறுஆய்வு மனுவையும், அதனுடன் இணைக்கப்பட்ட ஆவணங்களையும் கவனமாக ஆய்வு செய்ததில் எந்த அடிப்படை ஆதாரமும் இருப்பதாக தெரியவில்லை. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்” என்று உத்தரவிட்டது. #MahatmaGandhi #SupremeCourt

Tags:    

Similar News