செய்திகள்

புல்வாமா தாக்குதல் பற்றி பரவும் போலி படங்கள் - சி.ஆர்.பி.எப். எச்சரிக்கை

Published On 2019-02-17 09:22 GMT   |   Update On 2019-02-17 09:22 GMT
புல்வாமா தாக்குதலில் பலியானவர்களின் உடல் பாகங்கள் என்று சமூக வலைத்தளங்களில் போலியாக வெளியிடப்படும் புகைப்படங்கள், வீடியோ தொடர்பாக முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. #PulwamaAttack #fakepictures #Pulwamamartyrs #CRPFAdvisory
புதுடெல்லி:

புல்வாமா தற்கொலைப்படை தாக்குதலில் 40  சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்ட பின்னர் இச்சம்பவம் தொடர்பாக பல செய்திகள் பலப்பல வதந்திகளும் வெளியாகி வருகின்றன.

பலியான வீரர்களின் குரூப் போட்டோ, கடைசி செல்பி மற்றும் கொல்லப்பட்டவர்களின் சிதைந்துபோன உடல் பாகங்கள் என சமூக வலைத்தளங்களில் ஏராளமான புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

மேலும், சினிமா காட்சிகளை வெட்டி, ஒட்டவைத்து பஸ் மீது கார் மோதி வெடிப்பது போன்ற வீடியோக்களை சிலர் வெளியிட்டு இப்படித்தான் புல்வாமா தாக்குதல் நடத்தப்பட்டது என இணையங்களில் பதிவேற்றி வருகின்றனர்.

இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் பலியானவர்களின் உடல் பாகங்கள் என்று சமூக வலைத்தளங்களின் போலியாக வெளியிடப்படும் புகைப்படங்கள், வீடியோ தொடர்பாக டெல்லியில் உள்ள சி.ஆர்.பி.எப். எனப்படும் துணை ராணுவப்படை தலைமை அலுவலகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது.



நாங்கள் எல்லாம் ஒன்றிணைந்து இருக்கும் நிலையில் எங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் சில சமூகவிரோதிகள் இதுபோன்ற தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

அப்படிப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை தயவுசெய்து பதிவேற்றம், லைக் மற்றும் ஷேர் செய்ய வேண்டாம். அப்படி காண நேரிட்டால் webpro@crpf.gov.in என புகார் அளிக்கவும் என சி.ஆர்.பி.எப். தலைமை அலுவலகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #PulwamaAttack #fakepictures #Pulwamamartyrs #CRPFAdvisory

Tags:    

Similar News