செய்திகள்

2017-18 நிதி ஆண்டில் ரூ.100 கோடி வருமானம் உடையவர்கள் 61 பேர்தான் - பொன்.ராதாகிருஷ்ணன்

Published On 2019-02-09 03:10 GMT   |   Update On 2019-02-09 03:10 GMT
2017-18 நிதி ஆண்டில் ரூ.100 கோடி வருமானம் உடையவர்கள் 61 பேர்தான் என்று நிதித்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #PonRadhakrishnan
புதுடெல்லி:

பாராளுமன்ற மக்களவையில் எழுத்து மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கு நிதித்துறை இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் பதில் அளித்தார்.

அதில் அவர், “நமது நாட்டில் 2017-18 மதிப்பீட்டு ஆண்டில், ஆண்டு வருமானம் ரூ.100 கோடியும், அதற்கு மேலும் வருமானம் ஈட்டியதாக 61 தனிநபர்கள் மட்டுமே கணக்கு காட்டி உள்ளனர்” என கூறி உள்ளார்.



2016-17 நிதி ஆண்டில் இந்த எண்ணிக்கை 38 ஆக இருந்து உள்ளது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றொரு கேள்விக்கு நிதித்துறையின் மற்றொரு ராஜாங்க மந்திரியான சிவபிரதாப் சுக்லா பதில் அளிக்கையில், “பினாமி சொத்து சட்டத்தின் கீழ் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் ரூ.6 ஆயிரத்து 900 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன” என தெரிவித்தார். #PonRadhakrishnan

Tags:    

Similar News