செய்திகள்

அன்னா ஹசாரேவின் உண்ணாவிரத போராட்டத்தை விமர்சித்த தேசியவாத காங். தலைவர் மீது அவதூறு வழக்கு

Published On 2019-02-01 05:08 GMT   |   Update On 2019-02-01 05:08 GMT
உண்ணாவிரத போராட்டத்தை விமர்சித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் மீது அவதூறு வழக்கு தொடரும்படி தனது ஆதரவாளர்களிடம் அன்னா ஹசாரே கூறியுள்ளார். #AnnaHazare
ராலேகான் சித்தி:

லோக்பால் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும், லோக்ஆயுக்தா அமைக்க வலியுறுத்தி மகாராஷ்டிர அரசை வலியுறுத்தியும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, தனது சொந்த ஊரான ராலேகான் சித்தியில், உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளார். அவரது போராட்டம் இன்று 3வது நாளாக நீடிக்கிறது.

இதற்கிடையே,  அன்னா ஹசாரேவின் போராட்டத்தை விமர்சித்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் கருத்து தெரிவித்தார். ஆர்ப்பட்டங்கள் மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்துவதற்காக வழக்கறிஞர்களிடம் அன்னா ஹசாரே பணம் வாங்குவதாக மாலிக் கூறியிருந்தார்.



இதனால் கடும் அதிருப்தி அடைந்த ஹசாரே, நேற்று தன்னை சந்திக்க முடிவு செய்திருந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க மறுத்துவிட்டார். அத்துடன், தன்னைப் பற்றி அவதூறாகப் பேசிய நவாப் மாலிக் மீது அவதூறு வழக்கு தொடரும்படி ஆதரவாளர்களிடம் கூறியுள்ளார்.

இதுபற்றி ஹசாரே கூறுகையில், “உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவதற்காக நான் பணம் வாங்கியதாக ஒரு அரசியல் கட்சியின் மூத்த தலைவர் (நவாப் மாலிக்) கூறுகிறார். நான் யாரிடம் எங்கே பணம் வாங்கினேன் என்பதை அவர் விளக்க வேண்டும். அவருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரும்படி எனது ஆதரவாளர்களிடம் கூறியிருக்கிறேன். மகாராஷ்டிராவில் 88க்கும் மேற்பட்ட பகுதிகளில் எங்களுக்கு ஆதரவாக மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். போராட்டத்தை தடுத்து நிறுத்த அரசாங்கம் முயற்சி செய்கிறது.” என்றார். #AnnaHazare
Tags:    

Similar News