search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anna Hazare"

    • அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது
    • அமலாக்கத்துறையை ஏவி, கெஜ்ரிவாலை பாஜக கைது செய்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது

    நேற்று அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு, சோதனை வாரண்டுடன் 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சென்றது. அங்கு கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கருத்து தெரிவித்துள்ளார்.

    "என்னுடன் இணைந்து மதுவுக்கு எதிராக குரல் எழுப்பிய அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் மதுக் கொள்கைகளை வகுத்துக் கொண்டிருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரின் கைதுக்கு அவரே தான் காரணம்" என அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.

    மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அவற்றை நிராகரித்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அமலாக்கத்துறையை ஏவி, கெஜ்ரிவாலை பாஜக கைது செய்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது

    பல ஆண்டுகளுக்கு முன்பு ஊழலுக்கு எதிரான லோக்பால் போராட்டத்தின் போது அன்னா ஹசாரே மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதற்கு பின்பு கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சி என்ற கட்சியை தொடங்கி தேர்தல் அரசியலில் ஈடுபட்டார்.

    • ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து அனைவரது பார்வையையும் பெற்றவர் அன்னா ஹசாரே.
    • லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர முக்கிய காரணமாக இருந்தவர் என்றால் மிகையாகாது.

    மகாராஷ்டிர மாநிலத்தில் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி பா.ஜனதா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி செய்து வருகிறது.

    மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்தில் இரு அவைகள் உள்ளன. மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களை கொண்ட சபை ஒன்று. மற்றொரு மேல்சபை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டசபையில் ஏற்கனவே லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டு விட்டது.

    இந்த நிலையில் நேற்று மேல்சபையில் இந்த மசோதா நிறைவேறியது. இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக் நாத் ஷிண்டே சமூக ஆர்வலரும், ஊழலுக்கு எதிராக போராடியவருமான அன்னா ஹசாராவை போன் மூலம் தொடர்பு கொண்டு, இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

    லோக் ஆயுக்தா வரம்பிற்குள் முதலமைச்சர் மற்றும் மந்திரிகள் அடங்குவர். லோக் ஆயுக்தா அதிகாரி ஒருவரை நியமித்தபின் அவரை மாற்றவோ இடமாற்றமோ செய்ய முடியது. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிதான் நீக்க முடியும்.

    அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு எதிரான ஊழல் குறித்த புகார்களை விரைவாக விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.

    மத்திய அரசு லோக் ஆயுக்தா மசோதாவை அமல்படுத்த அன்னா ஹசாரே நீண்ட நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார். காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியை இழக்க இவரது போராட்டம் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது. மேலும், இவருடன் உண்ணாவிரதம் இருந்து கெஜ்ரிவால் தனியாக சென்று கட்சி ஆரம்பித்து டெல்லி முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். பஞ்சாப் மாநிலத்திலும் கெஜ்ரிவாலிடம் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது.

    • அதிகார போதையில் இருப்பதாக அவர் 2 பக்கங்களுக்கு கெஜ்ரிவாலை விமர்சித்து கடிதம் எழுதியுள்ளார்.
    • சி.பி.ஐ. சோதனையில் எதுவும் கிடைக்காததால் அன்னா ஹசாரேவை பா.ஜனதா பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

    டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவரும், டெல்லி துணை முதல்- மந்திரியுமான மணிஷ் சிசோடியா வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தப்பட்டது. அவர் மீது வழக்கும் பதிவாகி இருந்தது. அவரது வங்கி லாக்கரையும் சி.பி.ஐ. நேற்று சோதனை செய்தது.

    டெல்லி அரசியலில் சி.பி.ஐ. சோதனை, விசாரணை, சிறப்பு சட்டசபை கூட்டம் என்ற பரபரப்புக்கு இடையில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே ஆரம்ப காலத்தில் தன்னை பின் பற்றி வந்த அரவிந்த் கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சித்து உள்ளார்.

    அதிகார போதையில் இருப்பதாக அவர் 2 பக்கங்களுக்கு கெஜ்ரிவாலை விமர்சித்து கடிதம் எழுதியுள்ளார்.

    இதற்கு டெல்லி முதல்- மந்திரியும், ஆம் ஆத்மி தலைவருமான கெஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார். சி.பி.ஐ. சோதனையில் எதுவும் கிடைக்காததால் அன்னா ஹசாரேவை பா.ஜனதா பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடந்து இருப்பதாக பா.ஜனதாவினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் சி.பி.ஐ. விசாரணையில் ஊழல் நடைபெறவில்லை என்று தெரியவந்துள்ளது.

    ஆனாலும் மக்கள் பாஜகாவை நம்பவில்லை. பிரபலமான ஒருவரை வைத்து தனி நபர் தாக்குதல் நடத்துவது அரசியலில் பொதுவானது தான். பா.ஜனதாவும் தற்போது அன்னா ஹசாரேயை வைத்து அதைத்தான் செய்கிறது.

    இவ்வாறு கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

    • டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவாலுக்கு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கடிதம் எழுதியுள்ளார்.
    • அதில் லோக் ஆயுக்தா, லோக்பாலை முற்றிலும் மறந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல் மந்திரியாக பதவியேற்ற பிறகு லோக் ஆயுக்தா, லோக்பாலை முற்றிலும் மறந்துவிட்டதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே எழுதிய கடிதத்தில் கூறியதாவது:

    நீங்கள் முதல் மந்திரியான பிறகு நான் உங்களுக்கு முதல்முறையாக கடிதம் எழுதுகிறேன். அதற்கு காரணம், அண்மையில் வெளியான டெல்லி மதுபான கொள்கை பற்றிய செய்திகள். டெல்லி அரசிடம் இருந்து இப்படியொரு கொள்கையை நான் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் முதல் மந்திரியான பிறகு லோக்பால், லோக் ஆயுக்தாவை முழுவதுமாக மறந்துவிட்டீர்கள். சட்டசபையில் ஒருமுறை கூட லோக் ஆயுக்தாவை கொண்டுவர முயற்சி செய்யவில்லை. இப்போது, உங்களின் அரசு மக்களின் வாழ்வை, பெண்களை பாதிக்கும் ஒரு கொள்கையைக் கொண்டு வந்துள்ளது. இது ஒன்றே போதும், உங்களின் வார்த்தைகளும், செயல்பாடுகளும் வெவ்வேறு என்பதைக் காட்ட.

    மகாராஷ்டிராவில் மதுபான கொள்கைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களின் விளைவாக மது விற்பனைக்கு எதிராக கிராமப்புற பெண்கள் குரல் கொடுக்கும் அதிகாரம் கிடைத்தது.

    ஆனால், இன்று டெல்லி அரசு மதுபான கொள்கையை அமல்படுத்த முயன்று, அதனால் ஊழலில் சிக்கியுள்ளது. டெல்லியில் மூலை முடுக்கு எல்லாம் மதுபான கடைகள் வந்துவிட்டன. ஒரு பேரியக்கத்தில் விளைந்த ஒரு கட்சிக்கு இதுவெல்லாம் அழகா. நீங்கள் அதிகார போதையில் இருக்கிறீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

    சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே நெஞ்சுவலி காரணமாக புனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    புதுடெல்லி:

    ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் முன்னோடியாக இருந்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே. சமூகப் பிரச்சினைகளுக்காக அவ்வப்போது உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபடுவார்.

    புனேவில் இருந்து 87 கி.மீ. தொலைவில் உள்ள மகாராஷ்டிராவின் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள ராலேகான் சித்தி கிராமத்தில் தங்கி வருகிறார்.

    இந்நிலையில், அன்னா ஹசாரேவுக்கு நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக புனேவிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    தற்போது அன்னா ஹசாரேவின் உடல் நிலை சீராக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அன்னா ஹசாரே பூரண குணமடைய வேண்டும் என முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    உயர்பதவி வகிப்பவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் அதிகாரம் படைத்த லோக்பால் ஆக சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதியின் பெயரை தொடர்புப்படுத்தி வரும் தகவலுக்கு அன்னா ஹசாரே வரவேற்பு தெரிவித்துள்ளார். #AnnaHazare #SCjudgeGhose #Lokpal
    புதுடெல்லி:

    தேசிய அளவில் லோக்பாலையும், மாநில அளவில் லோக் ஆயுக்தாவையும் அமைக்க வேண்டும், விவசாயிகள் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே வலியுறுத்தி வருகிறார்.  

    இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தன்னுடைய சொந்த ஊரான மராட்டிய மாநிலம் ரலேகன் சித்தியில் காந்தி நினைவு நாளான 30-1-2019 அன்று அன்னா ஹசாரே மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

    7-வது நாளாக  தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அன்னா ஹசாரேவை மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்தார். அப்போது, வரும் சட்டசபை தொடரில் லோக்பாலுக்கான புதிய மசோதா அறிமுகப்படுத்தப்படும் என முதல் மந்திரி பட்னாவிஸ் வாக்குறுதி அளித்தார். இதையடுத்து, 5-2-2019 அன்றிரவு தனது உண்ணாவிரதத்தை ஹசாரே முடித்துக் கொண்டார்.



    இந்நிலையில், நாட்டில் முதன்முறையாக மத்தியில் லோக்பால் நீதிபதியாக நியமிக்கப்படவுள்ள நபர்களின் பெயர்களை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

    ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதியும், தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினருமான நீதிபதி பினாக்கி சந்திரா கோஸ் பெயர் இந்த பதவிக்கான இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

    இந்த முடிவுக்கு அன்னா ஹசாரே வரவேற்பு தெரிவித்துள்ளார். இதன் மூலம் எங்களது 48 ஆண்டுகால போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். #AnnaHazare #SCjudgeGhose #Lokpal
    வயது முதிர்வால் என்னால் துப்பாக்கியை தூக்க முடியாது. ஆனால் தேவைப்பட்டால் வீரர்களுக்கு உதவியாக ராணுவ வாகனம் ஓட்ட முடியும் என மருத்துவமனையில் ஹசாரே கூறினார். #JammuKashmir #CRPF #AnnaHazare

    சமூக ஆர்வலர் மற்றும் காந்தியவாதியான கிசன் பாபுராவ் ஹசாரே, அனைவராலும் அன்னா என அழைக்கப்பட்டு அன்னா ஹசாரே என அறியப்பட்டார்.  அவர் மத்தியில் லோக்பால் மற்றும் மராட்டியத்தில் லோக்ஆயுக்தா சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஜனவரி 30ந்தேதி தனது சொந்த கிராமமான அகமதுநகர் மாவட்டம் ராலேகான் சித்தியில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.  

    அதன்பின் மராட்டிய முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார். ஆனால் உண்ணாவிரத போராட்டத்தால் அவரது உடல் நிலை மிகவும் மோசமாகி சுமார் 5 கிலோ வரை  உடல் எடை குறைந்திருந்தார்.

    இதனால் மகாராஷ்டிராவின் அகமதுநகரில் உள்ள மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    ராணுவ வாகன ஓட்டுனராக பணிபுரிந்தவரான ஹசாரே, தீவிரவாத தாக்குதல் பற்றி அறிந்தவுடன் கூறும்பொழுது, வயது முதிர்வால் என்னால் துப்பாக்கியை தூக்க முடியாது.  ஆனால் தேவை ஏற்பட்டால், நாட்டுக்காக போரிடும் நம்முடைய ராணுவ வீரர்களுக்கு பொருட்களை கொண்டு செல்வதற்கான வாகனம் ஓட்ட என்னால் முடியும் என கூறியுள்ளார்.

    கடந்த 1960ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த ஹசாரே அங்கு ராணுவ வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார்.  அதன்பின் கடந்த 1965ம் ஆண்டு நடந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போரில் கேம் கரன் பிரிவில் பணியாற்றி உள்ளார்.#JammuKashmir #CRPF #AnnaHazare
    உடல்சோர்வு காரணமாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #AnnaHazare #Hospitalised
    அகமதுநகர்:

    சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மராட்டிய மாநிலம் அகமதுநகர் மாவட்டம் ராலேகான் சித்தி கிராமத்தில் வசித்துவருகிறார். மத்தியில் லோக்பால், மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைக்க வலியுறுத்தி ஒரு வாரம் உண்ணாவிரதம் இருந்த அவர் கடந்த 5-ந்தேதி தான் உண்ணாவிரதத்தை கைவிட்டார். அப்போது அவரது உடல் எடை 5 கிலோ வரை குறைந்துவிட்டது.

    இந்நிலையில் நேற்று அவருக்கு உடல்சோர்வு ஏற்பட்டது. அவரை அகமதுநகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்ததில் அவரது மூளைக்கு ரத்தம் செல்வதில் குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவருக்கு உடல்சோர்வு மற்றும் சில பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  #AnnaHazare #Hospitalised 
    லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா நியமனம் தொடர்பான கோரிக்கையை மகாராஷ்டிரா மாநில அரசு ஏற்றதால் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தனது உண்ணாவிரதப் போராட்டதை இன்று கைவிட்டார். #AnnaHazare #DevendraFadnavis #AnnaHazarefast
    மும்பை:

    தேசிய அளவில் லோக்பாலையும், மாநில அளவில் லோக் ஆயுக்தாவையும் அமைக்க வேண்டும், விவசாயிகள் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே வலியுறுத்தி வருகிறார்.
     
    இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தன்னுடைய சொந்த ஊரான மராட்டிய மாநிலம் ரலேகன் சித்தியில் காந்தி நினைவு நாளான ஜனவரி 30-ந் தேதி அன்னா ஹசாரே காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார். அன்னா ஹசாரேவை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடல் எடை நான்கரை கிலோ குறைந்து விட்டதாக குறிப்பிட்டிருந்தனர். 

    உடல்நிலையை கருத்தில் கொண்டு தொடர் உண்ணாவிரதத்தை அன்னா ஹசாரே முடித்துக்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.



    இதற்கிடையே, 7-வது நாளாக இன்றும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அன்னா ஹசாரேவை மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இன்று சந்தித்தார். அப்போது, வரும் சட்டசபை தொடரில் லோக்பாலுக்கான புதிய மசோதா அறிமுகப்படுத்தப்படும் என முதல் மந்திரி பட்னாவிஸ் வாக்குறுதி அளித்தார்.

    அவருடன் மத்திய வேளாண்மைத்துறை மந்திரி ராதா மோகன் சிங், பாதுகாப்புத்துறை இணை மந்திரி சுபாஷ் பாம்ரே ஆகியோரும் சென்று உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு அன்னா ஹசாரேவிடம் வலியுறுத்தினர். 

    இதைத்தொடர்ந்து, மகாராஷ்டிரா அரசு தரப்பில் பட்னாவிஸ் அளித்த வாக்குறுதியை ஏற்று அன்னா ஹசாரே தனது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார். #DevendraFadnavis #AnnaHazare #AnnaHazarefast

    2014 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற பா.ஜனதா என்னை பயன்படுத்திக்கொண்டது என்று அன்னா ஹசாரே குற்றம்சாட்டி உள்ளார். #AnnaHazare #BJP
    மும்பை:

    சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மராட்டிய மாநிலம் அகமத் நகரில் உள்ள தனது சொந்த கிராமமான ராலேகான் சித்தியில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

    லோக்பால், லோக் ஆயுக்தாவுக்கு நீதிபதிகள் நியமிக்க கோரியும், மராட்டிய மாநிலத்தில் விவசாயிகள் பிரச்சினையை தீர்க்க கோரியும் அன்னா ஹசாரே கடந்த 30-ந்தேதி போராட்டத்தை தொடங்கினார்.

    அவர் இன்று 7-வது நாளாக உண்ணாவிரதம் இருந்தார்.

    இந்த நிலையில் 2014 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற பா.ஜனதா என்னை பயன்படுத்திக் கொண்டது என்று அன்னா ஹசாரே குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    2014 தேர்தலில் வெற்றி பெற பா.ஜனதா என்னை பயன்படுத்திக் கொண்டது. லோக்பாலுக்கான எனது போராட்டம் மூலம்தான் பா.ஜனதாவும், ஆம் ஆத்மியும் ஆட்சியை பிடித்தன. இப்போது இவர்கள் இருவர் மீதும் எனக்கு சிறிதளவு கூட மரியாதை இல்லை.

    பிரதமர் மோடியின் அரசு மக்களை தவறாக வழி நடத்துகிறது. மராட்டிய மாநில அரசும் கடந்த 4 ஆண்டுகளாகவே பொய்களை கூறி வருகிறது. இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் பொய்களை கூற முடியும். இந்த அரசு நாட்டு மக்களை கைவிட்டுவிட்டது.

    2011 மற்றும் 2014-ல் என்னுடைய போராட்டங்களினால் பயன் அடைந்தவர்கள் இன்று எனது கோரிக்கைகளை ஏற்க மறுத்து வருகிறார்கள்.

    இவ்வாறு அன்னா ஹசாரே கூறியுள்ளார். #AnnaHazare #BJP
    லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா நியமனத்தை வலியுறுத்தி 7-வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அன்னா ஹசாரேவை மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்தார். #AnnaHazare
    மும்பை:

    தேசிய அளவில் லோக்பாலையும், மாநில அளவில் லோக் ஆயுக்தாவையும் அமைக்க வேண்டும், விவசாயிகள் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே வலியுறுத்தி வருகிறார்.

    இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தன்னுடைய சொந்த ஊரான மராட்டிய மாநிலம் ரலேகன் சித்தியில் காந்தி நினைவு நாளான ஜனவரி 30-ந் தேதி அன்னா ஹசாரே காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார்.

    நேற்றைய நிலவரப்படி அன்னா ஹசாரே மிகவும் சோர்வாக காணப்பட்டார். அன்னா ஹசாரேவை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடல் எடை நான்கரை கிலோ குறைந்து விட்டதாக குறிப்பிட்டிருந்தனர்.



    உடல்நிலையை கருத்தில் கொண்டு தொடர் உண்ணாவிரதத்தை அன்னா ஹசாரே முடித்துக்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், 7-வது நாளாக இன்றும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அன்னா ஹசாரேவை மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று சந்தித்தார்.

    அவருடன் மத்திய வேளாண்மைத்துறை மந்திரி ராதா மோகன் சிங், பாதுகாப்புத்துறை இணை மந்திரி சுபாஷ் பாம்ரே ஆகியோரும் சென்று உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு அன்னா ஹசாரேவிடம் வலியுறுத்தினர். #DevendraFadnavis #AnnaHazare #AnnaHazarefast
    6-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவதால் 71.1 கிலோ எடை இருந்த அன்னா ஹசாரே தற்போது 4¼ கிலோவை இழந்து விட்டதாக டாக்டர் தனன்ஜெய் கூறினார். #AnnaHazare #HungerStrike
    மும்பை:

    தேசிய அளவில் லோக்பாலையும், மாநில அளவில் லோக் ஆயுக்தாவையும் அமைக்க வேண்டும், விவசாயிகள் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே வலியுறுத்தி வருகிறார். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தன்னுடைய சொந்த ஊரான மராட்டிய மாநிலம் ரலேகன் சித்தியில் காந்தி நினைவு நாளான ஜனவரி 30-ந் தேதி அன்னா ஹசாரே காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார்.



    தொடர்ந்து 6-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவதால் 71.1 கிலோ எடை இருந்த அன்னா ஹசாரே தற்போது 4¼ கிலோவை இழந்து விட்டதாகவும், ரத்த அழுத்தம் அதிகமாகி இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் சார்பில் அனுப்பப்பட்ட டாக்டர் தனன்ஜெய் கூறினார்.
    ×