செய்திகள்

மகாராஷ்டிராவில் அரசுப் பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கிய கிச்சடியில் பாம்பு

Published On 2019-02-01 05:00 GMT   |   Update On 2019-02-01 05:00 GMT
மகாராஷ்டிராவில் தொடக்கப்பள்ளி ஒன்றில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட கிச்சடியில் பாம்பு இறந்து கிடந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Maharashtra #Schoolfoodsnake
நான்டட்:

மகாராஷ்டிராவின் நான்டட் அருகே கர்கவன் ஜில்லா பரிஷத் தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 1 முதல் 5  வரையிலான வகுப்புகள் உள்ளன. அப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 50க்கும் அதிகமான குழந்தைகள் பயின்று வருகின்றனர்.   

இந்நிலையில், நேற்று முன்தினம் அப்பள்ளியில் வழக்கம்போல குழந்தைகளுக்கு மதிய உணவாக கிச்சடி தயாரிக்கப்பட்டது. பள்ளியின் ஊழியர் கிச்சடி பரிமாறுவதற்காக, பாத்திரத்தை திறந்த போது பாம்பு ஒன்று இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை உறுதிசெய்த பின்னர் உணவு வழங்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட்டது.  இதற்கான நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

மாணவர்களுக்கான கிச்சடி தயாரிக்கும் ஆர்டரை, அப்பகுதியில் உள்ள அரசு சாரா நிறுவனத்திடம் பள்ளி நிர்வாகம் கொடுத்துள்ளது. இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக நான்டட் பகுதியின் பள்ளிக்கல்வித்துறை அதிகாரி பிரசாந்த் டிக்ரஸ்கார் கூறினார்.

மகாராஷ்டிராவில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, குறிப்பாக பெண்களின் வருகையை அதிகரிக்க, 1996ம் ஆண்டு முதல் மதிய சத்துணவு திட்டத்தில், கிச்சடி சேர்க்கப்படுகிறது. இதன்மூலம் 1.25 கோடி மாணவர்கள் பயனடைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  #Maharashtra #Schoolfoodsnake 
Tags:    

Similar News