செய்திகள்

மோடி அரசின் பண மதிப்பிழப்பு திட்டம் சிறந்த நடவடிக்கை- திருத்தப்பட்ட ஜிடிபி கணிப்பில் தகவல்

Published On 2019-02-01 04:49 GMT   |   Update On 2019-02-01 04:49 GMT
பிரதமர் மோடியின் தலைமையிலான பாஜக அரசு மேற்கொண்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை, சிறந்த பலன் அளித்திருப்பதாக திருத்தப்பட்ட ஜிடிபி தரவுகள் தெரிவிக்கின்றன. #modi #demonetisation #RevisedGDP
புதுடெல்லி:

பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கும் என பொருளாதார நிபுணர்கள் பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், கடந்த 2 நிதியாண்டுகளுக்கான ஜிடிபி வளர்ச்சி குறித்த மத்திய அரசின் திருத்தப்பட்ட கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், 2017-18ல் 7.2% மற்றும் 2016-17ல் 8.2% ஆகவும் ஜிடிபி வளர்ச்சி உள்ளது. இந்த வளர்ச்சி வீதம் சிறந்த வளர்ச்சி வீதமாகும். அத்துடன், 2010-11 நிதியாண்டுக்கு பிறகு, பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட ஆண்டு வேகமான வளர்ச்சியை எட்டிய ஆண்டாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நிபுணர்களிடையே பரவலாக இருந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் எனும் எண்ணம், 2016-17ம் ஆண்டிற்கான இந்த பணமதிப்பிழப்பு வளர்ச்சி வீதம் ஆச்சரியம் அளித்தது. கடந்த 2017ல்  காலாண்டிற்கான மதிப்பீடுகள் சரிவர  வெளியாகவில்லை. அந்த தரவு கிடைத்த பின் வளர்ச்சி வீதம் துல்லியமாக கணக்கிடப்படும் என பொருளாதார நிபுணர் பிரசன்னா கூறினார்.

இந்த சதவீதம் மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் கணிசமாக உயர்ந்தது. இவை ஜிஎஸ்டி நடவடிக்கைக்கு முன்னதான வளர்ச்சி என அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

மேலும் திருத்தப்பட்ட ஜிடிபி கணிப்பின்படி, 2017ம் ஆண்டின் தொடக்கத்தில் மெதுவாக இருந்த வளர்ச்சி வீதம், பின்னர் 8.1% என ஆனது. அவ்வாண்டின் இறுதியில் மீண்டும் உயர்ந்தது என எஸ்பிஐ பொருளாதார ஆலோசகர் சவுமியா கண்டி கோஷ் தெரிவித்துள்ளார்.  #modi #demonetisation #RevisedGDP

Tags:    

Similar News