செய்திகள்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்தது- ஒருவர் பலி

Published On 2019-01-24 10:39 GMT   |   Update On 2019-01-24 10:39 GMT
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் உள்ள சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தின் மேற்பகுதி சரிந்ததால் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலியானார். #Dhanbadroofcollapsed
தன்பாத்:

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தன்பாத்தில் உள்ள கபாசரா என்ற இடத்தில், நிலக்கரி வெட்டி எடுப்பதற்காக நேற்று சிலர் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுரங்கப் பாதையின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த இந்த சுரங்கத்தினுள் பொது மக்கள் சிலர் சிக்கிக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இறந்த நபரின் அடையாளம் தெரியவில்லை எனவும், மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சுரங்கம், கிழக்கு கோல்பீல்ட் லிமிடெட் (இசிஎல்)நிறுவனத்திற்குட்ப்பட்டது. எனவே, இந்த நிறுவனம் மற்றும் நிறுவனத்திற்கு வெளியில் இருந்து ஆட்கள் சப்ளை செய்த நிறுவனத்திற்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது.

இதனையடுத்து, இசிஎல் பொதுமேலாளர், கபாசரா சுரங்கத்தின் திட்ட அலுவலர்கள், முக்மா பகுதியின் மேலாளர் மற்றும் அவுட்சோர்சிங் கம்பெனி அதிகாரிகள் மீது நிர்சா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  #Dhanbadroofcollapsed

Tags:    

Similar News