செய்திகள்

பீகாரில் கடும் மூடுபனியால் வாகனங்கள் மோதல்: ஒருவர் பலி- 15 பேர் காயம்

Published On 2019-01-04 05:08 GMT   |   Update On 2019-01-04 05:08 GMT
பீகார் மாநிலம் முசாபர்பூரில் மூடுபனி காரணமாக நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். #BiharFogConditions #VehiclePileup
முசாபர்பூர்:

வடமாநிலங்களில் கடுமையான குளிர் வாட்டி வதைக்கிறது. பனிப்பொழிவு மற்றும் பனிமூட்டம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விடிந்து வெகுநேரம் ஆகியும் பனி விலகாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்களை இயக்குகின்றனர். நெடுஞ்சாலையில் கண்ணை மறைக்கும் அளவுக்கு மூடுபனி இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். சில சமயங்களில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்றுமோதி விபத்துக்குள்ளாகின்றன.

இந்நிலையில், பீகார் மாநிலம் முசாபர்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற பெட்ரோல் டேங்கர் லாரி உள்ளிட்ட 9 வாகனங்கள் பனி மூட்டம் காரணமாக ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இன்று காலை ஏற்பட்ட இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 15 பேர் காயமடைந்தனர்.

இதேபோல் டெல்லி புறநகர்ப் பகுதியில் உள்ள கஞ்சவாலா-பாவனா சாலையில் நேற்று காலை ஒரு கார் திடீரென தீப்பற்றியது. இதனால் அந்த காரை நடுரோட்டில் அப்படியே நிறுத்திவிட்டு, அதில் பயணித்தவர்கள் வெளியேறினர். அப்போது பனிமூட்டம் காரணமாக பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதில் ஒரு கார் மற்றும் ஒரு பேருந்து தீப்பற்றியது. சுமார் 25 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால், பலர் காயமடைந்தனர். #BiharFogConditions #VehiclePileup
Tags:    

Similar News