செய்திகள்

கர்நாடகா - பிரசாதம் சாப்பிட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு

Published On 2018-12-14 15:51 GMT   |   Update On 2018-12-14 15:51 GMT
கர்நாடகாவில் கோவில் பிரசாதம் சாப்பிட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். #Karnataka #MarammaTemple #SuspectedFoodPoisoning
பெங்களூரு:

கர்நாடக மாநிலம் சாமராஜநகர் ஹனுர் தாலுகாவில் சுல்வாடி கிராமத்தில் அமைந்துள்ளது மாரம்மன் கோவில். இன்று வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தனர். பூஜைகள் முடிந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

சிறிதுநேரத்தில் பிரசாதம் சாப்பிட்ட பக்தர்களுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. அதில் 2 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். சிலரது நிலைமை மோசமானது. இதையடுத்து, சுமார் 40க்கு மேற்பட்ட பக்தர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். மேலும், பிரசாதம் சாப்பிட்ட 60க்கு மேற்பட்ட காகங்களும் இறந்து கிடந்தன என முதல் கட்ட தகவல் வெளியானது.



இந்நிலையில், கர்நாடகாவில் கோவில் பிரசாதம் சாப்பிட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக முதல் மந்திரி அலுவலக அதிகாரிகள் கூறுகையில், கோவில் பிரசாதம் சாப்பிட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் செலவை அரசே ஏற்றுக் கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளனர். #Karnataka #MarammaTemple #SuspectedFoodPoisoning
Tags:    

Similar News