செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டில் 225 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் - ராணுவ அதிகாரி

Published On 2018-12-08 13:02 GMT   |   Update On 2018-12-08 13:02 GMT
ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டில் மட்டும் 225 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என ராணுவ கமாண்டர் ரன்பீர் சிங் தெரிவித்துள்ளார். #JammuKashmir #RanbirSingh
ஜெய்ப்பூர்:

அண்டை நாடான பாகிஸ்தான் ராணுவத்தினர் மற்றும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்தவர்கள் ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசு தொடர்ந்து பாதுகாப்பு படை மூலம் அப்பகுதியில் அமைதி ஏற்படுத்த பல்வேறு வழிகளில் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
 
இந்நிலையில், வடக்கு பிராந்திய கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ரன்பீர் சிங் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:



ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 225 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகள் குறித்து உள்ளூர் மக்கள் பாதுகாப்பு படையினருக்கு உரிய தகவல் அளித்து வருவது நல்ல செய்தி.

ஜம்மு காஷ்மீரில் அமைதி மற்றும் நிலைத்தன்மை நிலவுவதை உறுதி செய்வோம். இந்தியாவில் ஜம்மு காஷ்மீரை தாண்டி பயங்கரவாதத்தை பரப்ப பாகிஸ்தான் முயற்சி செய்கிறது. இதனை தடுக்க ராணுவம் தொடர்ந்து முயற்சி செய்யும்.

மத்திய அரசு மற்றும் பாதுகாப்பு படையினர் எடுத்த பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளால் பயங்கரவாத அமைப்புகளில் இளைஞர்கள் சேர்வது வெகுவாக குறைந்துள்ளது என தெரிவித்துள்ளார். #JammuKashmir #RanbirSingh
Tags:    

Similar News