செய்திகள்

சபரிமலையில் இன்று மத்திய மந்திரி அல்போன்ஸ் கன்னம்தானம் ஆய்வு

Published On 2018-11-19 08:18 GMT   |   Update On 2018-11-19 08:18 GMT
மத்திய மந்திரி அல்போன்ஸ் கன்னம்தானம் இன்று சபரிமலையில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார். #Sabarimala #AlphonseKannanthanam
திருவனந்தபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜை விழாவுக்காக கடந்த 16-ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 17-ந்தேதி முதல் கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

கோவிலில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்யவில்லை என்று புகார்கள் கிளம்பியது. கேரளா பலத்த மழையால் பாதிக்கப்பட்ட போது சபரிமலையிலும் பெரும் சேதம் ஏற்பட்டது. இங்குள்ள கழிவறைகள், பக்தர்கள் ஓய்வு எடுக்கும் விடுதிகள் அனைத்தும் இடிந்தன. இவற்றை இதுவரை சீரமைக்கவில்லை என்று பக்தர்கள் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து கேரளாவைச் சேர்ந்த மத்திய மந்திரி அல்போன்ஸ் கன்னம்தானம் இன்று சபரிமலை சென்றார். அங்கு பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார். அவருடன் அதிகாரிகள் மற்றும் பா.ஜனதா கட்சியினரும் இருந்தனர்.  #Sabarimala #AlphonseKannanthanam

Tags:    

Similar News