செய்திகள்

குவைத் அமிர், பிரதமருடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு

Published On 2018-10-31 15:28 GMT   |   Update On 2018-10-31 15:28 GMT
கத்தார் பயணத்தை நிறைவுசெய்த வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று குவைத் நாட்டின் அமிர் (ஆட்சியாளர்) மற்றும் பிரதமரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #SushmaSwarajinKuwait #KuwaitAmir
குவைத் சிட்டி:

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக கத்தார், குவைத் ஆகிய நாடுகளுக்கு சென்றார்.

கத்தார் பயணத்தை நிறைவுசெய்த சுஷ்மா சுவராஜ், இன்று குவைத் நாட்டின் அமிர் (ஆட்சியாளர்) ஷேக் சபாஹ் அல்-அஹமத் அல்-ஜாபெர் அல்-சபா மற்றும் அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஜபார் அல் முபாரல் அல் ஹமாத் அல் சபா ஆகியோரை தனித்தனியாக சந்தித்து இந்தியா-குவைத் நாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

மேலும், துணை பிரதமரும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியுமான ஷேக் சபாஜ் காலித் அல்-ஹமாட் அல்-சபாஹ் ஆகியோரையும் அவர் சந்தித்தார். குவைத்தில் வாழும் சுமார் 8 லட்சம் இந்தியர்களின் நலன் மற்றும் இருநாடுகளுக்கு இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு, பாதுகாப்புத்துறை கூட்டுறவு தொடர்பாகவும் அவர் ஆலோசனை நடத்தினார்.  

இந்த சந்திப்புக்கு பின்னர் சுஷ்மா தனி விமானம் மூலம் இன்று மாலை டெல்லி புறப்பட்டார். #SushmaSwarajinKuwait #KuwaitAmir
Tags:    

Similar News