செய்திகள்

48 மணி நேரத்தில் 100 கிலோ தங்கம் பறிமுதல் - வருவாய்த்துறை அதிரடி

Published On 2018-10-27 19:37 GMT   |   Update On 2018-10-27 23:05 GMT
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 48 மணி நேரத்துக்குள் 100 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #DRI #GoldSmuggling
புதுடெல்லி:

இந்தியாவின் அண்டை நாடுகளில் இருந்து தங்கம் போன்றவற்றை கடத்துவது தொடர்கதையாக நடந்து வருகிறது. இதனை தடுக்கும் நடவடிக்கையில் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டன. மேற்கு வங்காளத்தின் சிலிகுரி பகுதியில் காரின் இருக்கைக்கு கீழ் மறைத்து வைத்து கடத்தப்பட்ட 55 கிலோ எடை கொண்ட தங்கத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து தங்கம் கடத்தியவர்களை கைது செய்த அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தங்கமானது எல்லைப்பகுதியில் ஊடுருவி சட்டவிரோதமாக கடத்தப்பட்டது என கூறப்பட்டுள்ளது.

இதேபோல், டெல்லி ரெயில் நிலையத்தில் நடைபெற்ற சோதனையில், 34 கிலோ எடைகொண்ட தங்கத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கடத்தலில் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.



மேலும், சென்னை, பெங்களூரு, மதுரை ஆகிய விமான நிலையங்களில் நடைபெற்ற சோதனையில், 13 கிலோ அளவிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்தும், சிங்கப்பூரில் இருந்தும் வந்த பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

48 மணி நேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந்த அதிரடி சோதனையில் 32 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #DRI #GoldSmuggling
Tags:    

Similar News