செய்திகள்

சிபிஐ விசாரணை அதிகாரி மாற்றம்- கெஜ்ரிவால் கண்டனம்

Published On 2018-10-24 11:46 GMT   |   Update On 2018-10-24 11:46 GMT
ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான ஊழல் வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ. அதிகாரியை மாற்றம் செய்ததற்கு டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். #Kejriwal #CBI
புதுடெல்லி:

சி.பி.ஐ. அதிகாரிகள் இடமாற்ற நடவடிக்கையில் இணைஇயக்குனர் ஏ.கே. சர்மாவும் ஒருவர். இவர் அஸ்தானா மீதான விசாரணை குழுவில் மேற்பார்வை அதிகாரியாக இருந்தார். அதோடு ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு பற்றியும் விசாரித்து வந்தார்.

அவர் அந்த பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை குழு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி டெல்லி முதல்- மந்திரி கெஜ்ரிவால் டுவிட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார். ரபேல் ஒப்பந்தம் பற்றி விசாரித்ததால் இடம் மாற்றமா? சி.பி.ஐ. இயக்குனர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட காரணம் என்ன? இதன்மூலம் லோக் பால் அமைப்பால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரிகளையும் நீக்க முடியும் என அரசுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதா? என்று கேட்டுள்ளார். #Kejriwal #CBI
Tags:    

Similar News