செய்திகள்

சபரிமலையில் பாரம்பரிய நடைமுறையை மாற்றக்கூடாது- தந்திரி கண்டரரு ராஜீவரு

Published On 2018-10-18 07:51 GMT   |   Update On 2018-10-18 07:51 GMT
சபரிமலையில் பாரம்பரியமாக கடைபிடிக்கப்படும் நடைமுறையை மாற்றக்கூடாது என கண்டரரு ராஜீவரு தெரிவித்துள்ளார். #SabarimalaProtests #KandararuRajeevaru
பத்தனம்திட்டா:

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு கேரள மாநிலத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்து அமைப்பினரும், ஐயப்ப பக்தர்களும் இந்த தீர்ப்பிற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுஒருபுறமிருக்க பலத்த பாதுகாப்புடன் நேற்று கோவில் நடை திறக்கப்பட்டது. ஆனால் கோவிலுக்கு வந்த பெண்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் இதுவரை எந்த பெண்ணும் கோவிலுக்கு செல்லவில்லை.

போலீசார் உரிய பாதுகாப்பு கொடுப்போம் என்று கூறினாலும், கோவில் பாரம்பரிய நடைமுறைகளை மதிக்கும் பெண்கள் யாரும் கோவிலுக்கு வரவில்லை. சிலர் வந்தாலும், பின்னர் சூழ்நிலையை உணர்ந்து பின்வாங்கிவிடுகின்றனர்.



இதுபற்றி சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு கூறுகையில், சபரிமலையில் பாரம்பரியமாக கடைபிடிக்கப்படும் நடைமுறைகளை மாற்றக்கூடாது என கருத்து தெரிவித்தார்.

‘உச்ச நீதிமன்றம் பாரம்பரியத்தை கருத்தில் கொள்ளாமல் சட்டத்தைப் பற்றி மட்டுமே நினைக்கிறது. உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பால் பெரும்பாலான மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். வன்முறையினால் எதையும் சாதிக்க முடியாது. சபரிமலை பகுதியில் பக்தர்கள் அல்லாதவர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். குறிப்பிட்ட அந்த வயது பெண்கள் தயவு செய்து சபரிமலை வருவதை தவிர்க்க வேண்டும். சபரிமலையை கலவர பூமியாக்க வேண்டாம்’ என்றும் அவர் கேட்டுக்கொண்டார். #SabarimalaProtests #KandararuRajeevaru
Tags:    

Similar News