செய்திகள்

தலைமறைவு குற்றவாளியாக நிரவ்மோடி அறிவிப்பு- சூரத் கோர்ட்டு நடவடிக்கை

Published On 2018-10-11 07:49 GMT   |   Update On 2018-10-11 07:49 GMT
வெளிநாடுகளில் இருந்து வைர கற்களை இறக்குமதி செய்தபோது சுங்க வரியை ஏய்ப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நிரவ்மோடியை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று சூரத் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #NiravModi
புதுடெல்லி:

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ்மோடி தொழிலை விருத்தி செய்வதற்காக பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கினார்.

பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் மட்டும் ரூ.12 ஆயிரத்து 400 கோடி ரூபாயை கடன் வாங்கி இருந்தார்.

கடனை திருப்பி கொடுக்காமல் அவர் இழுத்தடித்துக் கொண்டே இருந்தார். இதையடுத்து அவர் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இதனால் அவர் கடந்த ஜனவரி மாதம் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டார்.

அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. அவர் செய்த பணப்பரிமாற்றம் மோசடி குறித்து அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து வைர கற்களை இறக்குமதி செய்தபோது சுங்க வரியை ஏய்ப்பு செய்ததாக அவர் மீது சூரத் கோர்ட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது.

அப்போது நிரவ்மோடிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. மேலும் நிரவ் மோடியை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். #NiravModi
Tags:    

Similar News