செய்திகள்

ரஷிய பொருளாதார மன்றத்தில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு, புதின் அழைப்பு

Published On 2018-10-05 23:21 GMT   |   Update On 2018-10-05 23:21 GMT
அடுத்த ஆண்டு நடைபெறும் ரஷிய பொருளாதார மன்றத்தில் தலைமை விருந்தினராக பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்தார். #PutininIndia
புதுடெல்லி:

இந்தியா-ரஷியா உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வந்திருந்தார். டெல்லியில் பிரதமர் மோடியுடன் நேற்று அவர் பல்வேறு அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அவர், ரஷியாவில் அடுத்த ஆண்டு (2019) நவம்பர் மாதம் நடைபெறும் பொருளாதார மன்றத்தில் தலைமை விருந்தினராக பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தார். இதை பிரதமர் ஏற்றுக்கொண்டது தொடர்பான தகவல்கள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்த சந்திப்பை தொடர்ந்து டெல்லியில் நடந்த வர்த்தக கூட்டத்தில் இரு தலைவர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளை பட்டியலிட்டார். மேலும் இவற்றை பயன்படுத்தி வர்த்தகம் செய்யுமாறு ரஷிய முதலீட்டாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

குறிப்பாக இந்தியாவில் ராணுவ தொழிற்பூங்கா அமைக்குமாறு ரஷிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி, இதன் மூலம் இருநாட்டு உறவுகள் மேலும் விரிவடையும் என தெரிவித்தார். #VladimirPutin #PMModi #PutininIndia
Tags:    

Similar News