செய்திகள்

தெலுங்கானாவில் இலவச சேலைகள் வழங்கக் கூடாது - தேர்தல் ஆணையம் உத்தரவு

Published On 2018-10-03 18:47 GMT   |   Update On 2018-10-03 18:47 GMT
தெலுங்கானா மாநிலத்தில் இலவச சேலைகளை வழங்கக் கூடாது என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. #Telangana #EC #BathukammaFestival
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியை சேர்ந்த சந்திரசேகர் ராவ் ஆட்சி செய்து வந்தார். கடந்த மாதம் தனது ஆட்சியை கலைத்தார். இதையடுத்து, இந்த ஆண்டின் இறுதியில் அங்கு சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

மாநில ஆட்சி கலைக்கப்பட்டதால் அங்கு தேர்தல் நடைமுறைகள் அமலில் உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.



இதற்கிடையே, தெலுங்கானா மாநிலத்தில் நடைபெறவுள்ள பதுகம்மா திருவிழாவை முன்னிட்டு மாநிலம் முழுவதிலும் 90 லட்சம் சேலைகள் இலவசமாக வழங்கப்படும் என தகவல் தொழில்நுட்பத் துறை மந்திரி ராமாராவ் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், மாநில அரசின் இலவச சேலை விநியோகம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து, தெலுங்கானா மாநிலத்தில் இலவச சேலைகளை விநியோகம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #Telangana #EC #BathukammaFestival
Tags:    

Similar News