செய்திகள்

கேரளாவின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு - கூடுதல் வரிவிதிப்பு குறித்து 7 பேர் கொண்ட அமைச்சர்கள் குழு

Published On 2018-09-28 10:45 GMT   |   Update On 2018-09-28 10:45 GMT
மாநில ஜிஎஸ்டி மீது 10% செஸ் வரி விதிக்க அனுமதி வேண்டிய கேரளாவின் கோரிக்கையை பரிசீலிக்க, 7 மந்திரிகள் கொண்ட குழுவை மத்திய மந்திரி அருண் ஜெட்லி நியமித்துள்ளார். #Kerala #FMJaitley #CalamityCess
புதுடெல்லி:

கேரளாவில் வரலாறு காணாத அளவு பெய்த கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு போன்ற பாதிப்புகளால் பல ஆயிரம் கோடிக்கு சேதம் ஏற்பட்டது. இந்த சேதத்தை விரைந்து சரிசெய்யும் முயற்சியில் கேரள அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அந்த முயற்சிகளில் ஒன்றாக மாநில ஜிஎஸ்டி வரியில் கூடுதலாக 10 சதவிகிதம் வரி விதிக்க அனுமதி கோரி மத்திய மந்திரி அருண் ஜெட்லியிடம் கேரள அரசு கோரிக்கை விடுத்து இருந்தது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கேரள அரசின் கோரிக்கையை பரிசீலிக்க 7 மந்திரிகள் கொண்ட குழுவை மத்திய மந்திரி அருண் ஜெட்லி நியமித்துள்ளார். #Kerala #FMJaitley #CalamityCess
Tags:    

Similar News