செய்திகள்

வடகிழக்கு பருவமழை 29-ந்தேதி தொடங்குகிறது

Published On 2018-09-26 09:27 GMT   |   Update On 2018-09-26 09:27 GMT
வருகிற 29-ந்தேதியுடன் தென்மேற்கு பருவ மழை முடிவடையும் நிலையில் அன்றில் இருந்து வடகிழக்கு பருவ மழை தொடங்குவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #IMD #NorthEastMonsoon
புதுடெல்லி:

தென்மேற்கு பருவமழையால் வட மாநிலங்களில் பலத்த மழை பெய்தது. பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டது.

கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட இந்தியாவில் தென்மேற்கு பருவமழை அதிகரித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் இமாச்சல பிரதேசத்தில் 14 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் அதிக மழை பெய்கிறது. கடந்த 4 தினங்களில் அங்கு இயல்பை விட 33 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது.


டாலே புயலால் பருவமழை மேலும் அதிகரிக்கலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், அரியானா, டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மாநிலங்களில் தென்மேற்கு பருவமழையால் பலத்த மழை பெய்தது.

வருகிற 29-ந்தேதியுடன் தென்மேற்கு பருவ மழை முடிகிறது. அன்றில் இருந்து வடகிழக்கு பருவ மழை தொடங்குகிறது. இதை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

வடகிழக்கு பருவமழை இந்த முறை சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #IMD
Tags:    

Similar News